இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குருதி காணா நிலம்

நான்கில் ஒரு பங்கே நிலம்  அதில் மனிதன் புகா நிலம் எவ்வளவு? மனிதன் புகுந்து குருதி காணா நிலம் எது? அவற்றில் மிகப்பெரும் நிலப்பரப்பு எது? அங்கு சென்று வாழ வேண்டும் 

பருவம்

ஒவ்வொரு கலியாணம் காதுகுத்து சாவுக்கும் அருள்மொழி கோதை வேல்முருகன் எல்லோரும் வந்து சேர்வார்கள் நாங்கள் பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருப்போம் அம்மா அப்பாக்களுக்கு மட்டும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருக்கும் இப்போதும் கலியாணத்தில் காதுகுத்தில் சாவுகளில் சந்தித்துக்கொண்டுதானிருக்கிறோம் விளையாட வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை நாங்கள் பாட்டுக்கு இருக்க முடிந்தால் போதும் ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு பாடுகள்

அறிவியலில் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்

ஈரோட்டு மகாகவிக்கு எட்டயபுரத்துப் பெருங்கவியின் பெயர் தாங்கிய  சிறுவன் என் பெருவணக்கம்  சிறுவன்? உங்கள் செய்திகளையும் கவிதைகளையும்  தொலைக்காட்சியாய்க் கண்டு கேட்டு வளர்ந்த  எழுபது-எண்பதுகளின் பிள்ளைகளில் ஒருவன் நான்  எனவே  இன்று உங்கள் முன்  மீண்டும் சிறுவனாகிறேன்  நேரச் சிக்கல் மதித்து  ஏனையோர் எல்லோருக்குமாகச் சேர்த்து  மொத்தமாக ஓர் ஊத்தப்ப வணக்கம்! அறிவியலில் தமிழ் முழக்கம்  கண்டிப்பா வேணுமா? இன்று அறிஞர் வயப்பட்டிருக்கும் அறிவியலை  அன்றே மக்கள்மயப்படுத்தியிருந்த... ஆமைகளும் காகைகளும் கொண்டு  ஆழியில் திசை கண்டு ஆண்ட  ஆதி இனம் என்னும் அகந்தையா? உலகம் தட்டையெனும் மட்டைகளுக்கு மத்தியில்  நாண்மீன் கோள்மீன் என்றும்  கோள்மீன் சூழ்ந்த இளங் கதிர் ஞாயிறென்றும்  செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் என்றும்  ஈராயிரமாண்டு முன்பே வானியல் பாடிய இறுமாப்பா? மறுப்பது சாவை மருந்தென லாமே என்று  அதற்கும் முன்பே அறிவித்துச் சென்ற  மந்திர மூலரின் மக்கள் நாமென்ற ‘சித்த’ச் செருக்கா? மந்திர மூலரின்...

#பெருங்கசிவு

காலை 6:06 லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ், கலிஃபோர்னியா  கதிரவன் இருட்டை விழுங்கி ஏப்பம் விடும் நேரம். உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் - இன்னும் தன் இரவு உடையில்தான் இருக்கிறார் - உலகெங்கிலும் இருந்து வந்து குவிந்துகொண்டிருக்கும் தற்கொலைப் புள்ளிவிவரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். சென்ற ஆண்டு கொரோனா சாவுகளின் எண்ணிக்கையைப் பார்த்த போதைவிடப் பயங்கரமானதோர் அனுபவம் இது. ஒவ்வொரு நொடியும் எண்கள் எகிறிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு சாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர். நேற்றிரவு வரை ஆறாயிரத்தைக் கூடத் தாண்டவில்லை இந்த ஆண்டுக்கான எண். கடந்த மூன்று மணி  நேரத்தில் மட்டும் 33,000 பேர்  இறந்திருக்கிறார்கள். பல் துலக்கக் கூடப் போகப் பிடிக்கவில்லை. அதற்குள் எண்ணிக்கை எவ்வளவு ஆகிவிடுமோ. இந்த எண்கள் எப்படிச் சேகரிக்கப்படுகின்றன? இவற்றின் உண்மைமையை எப்படி நம்புவது? இது போன்ற சாவுகளை அடியோடு மறைக்கும் - குறைத்துக்காட்டும் நாடுகளும் இருக்கின்றன. நான் பிறந்த புனித பூமியே அப்படியான ஒன்றுதானே! ...