இடுகைகள்

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (1/3)

படம்
சிங்கப்பூர் வரும் போது எண்ணி எண்ணி மகிழ்ந்த ஒன்று - தமிழுடனான என் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வசதியான ஒரு வெளிநாட்டுக்குச் செல்கிறோமே என்பதுதான். பெங்களூரில் தமிழ் கற்க முடியாத என் மகள் இங்கு வந்து ஆனா ஆவன்னாப் படிக்க முடியும். தமிழர்கள் தம் சொந்த மண்ணை விடக் கண்ணியமான வாழ்க்கை வாழ்கிறார்கள் இங்கு. தமிழ் நாட்டில் பல ஊர்களில் கிடைக்காத வசதி இங்கே கிடைக்கிறது. அப்படியான ஒரு வசதி - பகுதிக்கு ஒரு நூலகம் இருக்கிறது. ஒவ்வொரு நூலகத்திலும் ஒரு பகுதி தமிழுக்கென்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதை அறிந்ததும் எப்படியும் நூலகத்தில் உறுப்பினராகி விட வேண்டும் என்று முடிவு செய்து அதையும் செய்து விட்டேன். முதல் முறை உள்ளே நுழைந்த போது என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு மகிழ்வதிலேயே இரண்டு மணி நேரம் போய் விட்டது. ஆனாலும் தமிழின் தலை சிறந்த நூல்கள் என்று அறியப்படும் எதுவும் சிக்க வில்லை. அந்நூல்களே அங்கு இல்லையா அல்லது அவை அனைத்தும் எடுத்துச் செல்லப் பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. இருந்த நூல்களில் நன்கு கேள்விப் பட்ட ஒன்று - குறிஞ்சி மலர். குறிஞ்சி மலர் பற்றி எப்படித் தெரியும் என்பத...

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 4/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடர்ச்சி... ஒவ்வொரு அறையிலும் ஹீட்டர் இருந்தது. ஆனாலும் குளிர் குத்திக் கிழித்தது. மகளுக்குப் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. படுத்துத் தூங்கி விட்டாள். மனைவி குளிரில் துடித்தாள். 'அய்யய்யோ, எல்லோரும் சொன்னது போல தப்புப் பண்ணி விட்டோமோ?!' என்று கிறுகிறுக்க ஆரம்பித்தது. யாருமே கிளம்பும் போதே குடும்பத்தோடு கிளம்புவதில்லை. போய் செட்டில் ஆகி மூச்சு விட முடிந்த பின்தான் குடும்பத்தை அழைத்துச் செல்வார்கள். நாங்களோ ஒரு மாத வேலை மட்டுமே உறுதியாகி இருந்த வேளையில், 'எந்தச் சிரமமாக இருந்தாலும் சேர்ந்து அனுபவித்து விட்...

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 3/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடர்ச்சி... நாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தின் பெயர் - க்ராய்டன் (CROYDON). கிராய்டனில் ஹை ஸ்ட்ரீட் என்ற இடத்தில் போய், சாவியை வாங்கிக் கொண்டு அருகிலேயே வேறோர் இடத்துக்குச் செல்ல வேண்டும். இலண்டனில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஹை ஸ்ட்ரீட் இருக்கிறது. அது இங்கிலாந்துக்கே உரிய ஒரு சொல்லாடல். பல நாடுகளில் மெயின் ஸ்ட்ரீட் என்பதை அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். நம்ம ஊர்ப் பாணியில் சொன்னால் கடைத்தெரு. சென்னையில் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கண்ணம்மாப் பேட்டை என்பது போல - பெங்களூரில் பொம்மனஹள்ளி, கம்மனஹள்ளி, மாரத்தஹள்ளி...

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 2/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடர்ச்சி... இருட்டி விட்டதால் வெளிச்சத்தில் இலண்டன் எப்படி இருக்கிறது என்று மேலிருந்தே காணும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்கப்பூரில் உணர்ந்தது போலவே இதிலும் பெரிதாக எதுவும் பிரமிப்படைய வைக்க வில்லை. இன்னும் சொல்லப் போனால், சிங்கப்பூரில் கூட சக்தி வாய்ந்த விளக்குகளின் வெளிச்சம் ஓரளவு மிரட்டியது. இலண்டனின் வெளிச்சம் அதை விட சிறிது குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இலண்டனுக்கென்று எவ்ளோ பெரிய வரலாறு இருக்கிறது. நம்மை வந்து கட்டிப் போட்டு ஆண்டவர்களின் தலைநகரம். ஆங்கிலத்தின் தலைநகரம் என்று சொல்லலாம். சென்று இறங்கிய பின்...

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 1/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! மேற்கு நோக்கிப் பயணிக்கப் போவதாகக் கட்டுரை எழுதி ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது. அப்படியோர் ஆசைப் பட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியது அதற்கு ஓராண்டுக்கு முன்னால். மேற்குதான் என்றில்லை; எங்காவது போய் விட்டால் நல்லது என்று துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தேன் (என் பயணக் கட்டுரைகள் அனைத்தையும் படித்து முடிக்காமல் "வெளிநாட்டு மோகம்" என்று ஓரிரு வார்த்தைகளில் கதையைச் சுருக்கி விடாதீர்கள். அது ஒரு பெரும் கதை. அதைச் சுற்றி எத்தனையோ கிளைக் கதைகள் இருக்கின்றன. அவையனைத்தையும் பற்றிப் பேசத்தான் இந்தத் தொடர்!). நினைத்தபடி எதுவ...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (6/6)

படம்
விடுதி-வெளி மாணவர்கள் பொதுவாகவே எல்லா வகுப்புகளிலும் விடுதி மாணவர்கள் ஒரு குழுவாகவும் வீட்டிலிருந்து தினமும் வந்து செல்லும் வெளி மாணவர்கள் ஒரு குழுவாகவும் இருப்பர். இந்தக் குழுவுணர்வுதானே மனித இனத்தையே துண்டாடிப் போட்டுக் கொன்று குவித்துக் கொண்டு இருப்பது. சிலர் மட்டுமே இந்த எல்லைகளைக் கடந்து பழகுவது. எண்ணிக்கையில் குறைவு என்பதால் எங்கள் வகுப்பில் இது சிறிது பரவாயில்லை. சொந்த ஊர் அருகிலேயே இருக்கும் சிலர் சில காலம் இதுவாகவும் சில காலம் அதுவாகவும் இருப்பார்கள் (அதாவது விடுதி மாணவனாகவும் வெளி மாணவனாகவும்). சில விடுதி மாணவர்கள் எப்போதுமே வெளி மாணவர்களோடு சுற்றுவார்கள். அவர்களுடைய வீடுகளிலேயே கிடப்பார்கள். திருச்செந்தூரைச் சொந்த ஊராக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த உள்ளூர்ப் பெண்கள் எல்லோரையுமே இவர்களுக்கும் தெரிந்திருக்கும். அது போலவே வெளி மாணவர்கள் நிறையப் பேர் எங்களுடனே கிடப்பார்கள். உள்ளே இருக்க முடிந்த நேரம் முழுக்க எங்களுடனே இருப்பார்கள். வார்டன்கள் அழைத்து சிலரைக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒன்னு மண்ணாய் இருப்பார்கள். அப்படி எங்களுடனேயே வந்து...

நகரியம்

படம்
சேவல்களின் கூவலில் விடிந்த காலைப் பொழுதுகள் இப்போது கடிகார மணியோசையில்... கல் தடுக்கி விழுந்தாலும் கதறி ஓடிவரும் பாமர மனிதர்களோடே வாழ்ந்து பழகி விட்டதால் காரிலடிபட்டுக் கிடந்தாலும் அனுதாபமாயோர் அன்னியப் பார்வை வீசிவிட்டுப் பறக்குமிந்தப் படித்த ஞானிகளோடு ஒத்துப் போவது வெகு சிரமம்! நச்சுப் புகைக் காற்றும் இரைச்சலுமான சூழலில் மனிதமும் மாசு பட்டு விட்டது! கிராமியம் கேவலமாய் நகரியம் நாகரிகமாய் சித்தரிக்கப் படும் பொழுதுகளில் சினம் கொண்டு சீரும் மனம் சில நேரங்களில் எதிர்மறையாயும் எண்ணத்தான் செய்கிறது.... என்ன சாதியென்று விசாரணை செய்யும் இழிநிலை இங்கில்லையே! எனவே வாழ்க நகரியம்! * 1998 நாட்குறிப்பில் இருந்து...