வம்ச அரசியல் மோகம் (TRYST WITH THE DYNASTY)
முன் குறிப்பு: ஈழப் பிரச்சனையையும் அதில் காங்கிரசின் நிலைப்பாட்டையும் பற்றிய கோபங்களை மட்டும் சிறிது நேரம் ஒதுக்கி வைத்து விட்டு இதைப் படியுங்கள். அந்த கோபங்கள் அனைத்தும் எனக்கும் அப்படியே உண்டு. ஆனாலும், நாமெல்லாம் இப்போதைக்கு இந்த நாட்டின் ஓர் அங்கமாக இருப்பதால், அதற்கு அப்பாற்பட்டும் இந்திய அரசியல் பற்றிப் பேச வேண்டியுள்ளது என்பதும் காலத்தின் கட்டாயம். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் விடியலுக்கு முந்தைய இரவில் பேரறிஞர் (இந்த அடைமொழி அண்ணாவுக்கு மட்டுமே சொந்தம் எனப் பிடிவாதமாய் இருக்கும் தம்பி அல்ல நான்!) நேரு ஆற்றிய உரையின் பெயர் "TRYST WITH THE DESTINY". அதாவது, கிட்டத் தட்ட "விதியோடு உல்லாசம் / விளையாட்டு" என்று பொருள் படும் என வைத்துக் கொள்ளலாம். அதையே சிறிது சுளுக்கினால் TRYST WITH DYNASTY என்றாகிறது. அதன் பொருளோ "வம்ச அரசியலோடு உல்லாசம் / விளையாட்டு" என்றாகிறது. அதையே இன்னும் கொஞ்சம் சுளுக்கி "வம்ச அரசியல் மோகம்" என்றாக்கி விடுவோம் தமிழில். மோகம்தானே உல்லாசங்களின் மூலம். இதுவரை இந்த நாட்டை ஆண்டோரிலேயே அதிகம் தக...