பயம்

குப்பனுக்கும் சுப்பனுக்கும்
அலுவலகங்கள் என்றாலே உள்நுழைய பயம்
வங்கிகள் என்றால் எட்டிப் பார்க்கவே பயம்
அங்கிருக்கும் ஆபீசர்களைக் கண்டால் அதைவிட பயம்

பயங்களை வென்று
தைரியம் வரவழைத்து
நுழைகிற சில பொழுதுகளிலும்
அவர்களைப் பயமுறுத்தி பீதியடைய வைக்கும்
நுட்பங்கள் அனைத்தும் ஆபீசர்களுக்கு அத்துப்படி

அம்புட்டுக் கெட்டிக்கார ஆபீசர்களும்
அவர்களின் பெண்டு பிள்ளைகளும்
குப்பனும் சுப்பனும் வாழும் பகுதிகளுக்குள்
நுழையவே அடையும் பயம்
நடமாடும் போது அடைகிற பீதி

இரண்டுக்கும் ஏதும் தொடர்பில்லைதானே?!

கருத்துகள்

  1. அற்புதக் கவிதை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி மேரி ஜோஸ் அவர்களே. இப்போதுதான் ஒருவர் புரியவில்லை என்று மிகக் கோபமாகத் திட்டினார். உங்கள் கருத்துரை வந்தபின் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்