இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதே இடம்

எது எங்கள் குலத்தொழில்? என் தொழில் கட்டடம் கட்டுவது. எங்கள் சொந்தக்காரர்களில் எல்லோரும் கட்டடம் கட்டுபவர்கள் இல்லை. எங்கள் பெரியப்பா வீட்டில் எல்லோரும் படித்து நல்ல பணிகளில் இருக்கிறார்கள். அதில் கட்டடம் கட்டும் இஞ்சினியர் வேலைக்குப் படித்த அண்ணன் ஒருத்தனும் உண்டு. சின்ன வயதில் இஞ்சினியர் என்றாலே கட்டடமும் பாலமும் கட்டுபவன் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட அந்த வயதில் கேள்விப்பட்ட எல்லாமே தவறாகித்தான் போனது. பெரியப்பா மகனும் கூட கட்டடம் எல்லாம் கட்டுவதில்லையாம். கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தினுள் உட்கார்ந்து கம்ப்யூட்டரில்தான் வேலை செய்கிறானாம் இப்போது. பிள்ளைகள் எல்லாம் படித்து விட்டதால் பெரியப்பாவும் பிள்ளைகளும் ஊர்ப்பக்கமே எட்டிப் பார்ப்பதே இல்லை. தாத்தாவும் தாத்தாவுக்குத் தாத்தாவும் விவசாயம்தான் செய்திருக்கிறார்கள். அதனால் விவசாயம்தான் எங்கள் குலத்தொழில் என்றும் சொல்லலாம். ஆனால் அவர்களின் பெரிய மீசைகள் எப்போதும் நாங்கள் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்பதை மறந்து விடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. அதனால் அரசாள்வதே எங்கள் குலத்தொழிலாக இருந்திருக்க வேண்டும...

நல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜீவ கரிகாலன் என்ற காளிதாசனும் நானும் ஒருவரை ஒருவர் கண்டெடுத்தோம். ஆனால் எங்கள் உறவு கிட்டத்தட்ட எண்பதாண்டுப் பழமை (!) வாய்ந்தது. ஒவ்வொருத்தருக்கு ஒரு கிறுக்கு. சாதி, மதம், மொழி, இனம், நாடு, ஊர் என்று ஏதோவொன்றின் மீது ஏற்படும் கிறுக்கில் இருந்து நம் எவருமே தப்பியதில்லை என்றே நினைக்கிறேன். அப்படியான ஒரு கிறுக்கு சொல்லி வைத்தாற்போல் எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருக்குமே எங்கள் ஊரின் மீது உண்டு. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொண்டே வருகிறோம். எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருமே இணையத்தில் தேடிய முதற் சில சொற்களில் ஒன்று எங்கள் ஊரின் பெயராகத்தான் இருக்கும். நானும் இன்றுவரை அதைப் பல முறை செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதோவொன்று புதிதாய்க் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஓர் ஊர் அது. அப்படியான ஒரு தேடலின் போது நான் எங்கள் ஊரைப் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்றைக் கண்டு தொடர்பு எல்லைக்குள் வந்தார் காளிதாசன். காளிதாசன் மட்டுமல்ல, அது போலப் பல பழைய உறவுகளை மீட்டுக் கொடுத்த கட்டுரை அது. அப்போது நான் சிங்கப்பூரில் இருந்தேன். இருவர...

தாயுள்ளம்

ஒரு கொலைகாரனை கோபக்காரன் திமிர் பிடித்தவன் பொறுப்பற்றவன் சோம்பேறி என்று மற்ற எல்லாக் குறைகளையும் மட்டும் சொல்லித் திட்ட பெரும் தாயுள்ளம் வேண்டும்

நாயே

எவரையும் எளிதில் நாய் என்றிடுகிறீர்கள் நன்றியுடைமை நக்குதல் குரைத்தல் கடித்துக் குதறுதல் இடமறிந்து வாலாட்டுதல் இவை தவிர நாய்கள் பற்றி வேறேதும் இல்லையென்று எ...

அன்பு

நீ மிதமிஞ்சிச் செலுத்திய நஞ்செல்லாம் என் பாதி உயிரைக் குடித்தபின்தான் உணர்த்தின அவை யாவும் அளவுக்கு மீறிய அமிர்தத்தின் மறு வடிவம் என்று

திருடர் நீதி

எல்லோரும் திருடர்கள்தாம் அதற்காக... என்னை வாழவைக்கும் திருடன் என்னைக் கேள்வி கேட்கும் திருடன் பேசாமல் தானுண்டு தன் திருட்டுண்டு என்றிருக்கும் திருடன் எல்லோரும...

தலைவன்

அகநானூற்றுத் தலைவன் உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான் கேள்வி கேட்காமல் தன்னையே கொடுத்து ஏமாந்தாள் தலைவி வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அகமொன்று வைத்துப் புறமொன்று பேசாத புறநானூற்றுத் தலைவன் இங்கும் அதே போல் உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான் கேள்வி கேட்காமல் மண்ணைக் கொடுத்து ஏமாந்தான் தொண்டன் கொடுப்பேன் என்று சொல்லாமல் கொடுத்தவர் என்றோ ஒருநாள் புரட்டப்படும் வரலாறானார் கொடுப்பேன் என்று சொல்ல மட்டும் செய்தவர் வரலாற்றையும் மாற்றி எழுதவல்ல தலைவரானார்

நெனப்பு

பூனை தன்னைப் புலியாக நினைத்துக் கொண்டு பாய்ந்த போது எலி இரையாகும் முன் தன்னை மானாக எண்ணிக் கொண்டது

அறிவாயுதம்

அறிவு பெரும் ஆயுதந்தான் தன்னையும் தன் பிள்ளைகளையும் மட்டுமே காத்துக் கொள்ளும் மடக்குக் கத்திகளும் உள மண்ணைக் காக்கும் போர்வாட்களும் உள உயிர்காக்கும் சிகிச்சைக்குப் பயன்படும் அறுவைக் கத்திகளும் உள வெற்று மிரட்டல்களுக்கும் வேடிக்கை காட்டவும் நடிப்புக்கும் மட்டுமே பயன்படும் அட்டைக்கத்திகளும் உள இதில் எது உன் ஆயுதம்?

பசி

பசியில் துடிக்கிறானா? பக்கத்தில் இருப்பவனைப் பகைவனாக்கி விடு பசி மறந்து போகும்

மொழியும் மதமும்

உணர்ச்சி - வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்களில் பெரும்பாலும் முதலில் தமிழனாக இருந்து பின்னர் இந்துவான கூட்டங்களின் பிள்ளைகள் மொழிவாத அரசியலையும், முதலில் இந்துவா...

கோடைதான்

உன் வருகைக்கு முன்பும் பிரிவுக்குப் பின்புமான வாழ்க்கை சென்ற கோடைக்கும் இந்தக் கோடைக்கும் இடையிலான வேறுபாடு போலத்தான் வறட்சிதான் என்றாலும் நடுவில் வந்து சென...

உளநோய்

சாமியாடி வழிந்தோடிய எம் தாய்மாரின் உளக்கொதிப்பெல்லாம் உளவுலைக்குள்ளேயே தேங்கி உருக்குலைக்கின்றன எம் பிள்ளைகளை உள நோய்களாய்

பழி

எனக்கு ஒரு கண் போனாலும் உனக்கு இரு கண்கள் போக வேண்டும் என் இரு கண்களையும் இழந்தாவது உனக்கு ஒரு கண்ணாவது போக வைப்பேன் உன் மேல் பழி விழுமென்றால் என் கண்களைக் கூட இழக...

அரசு அலுவலகம்

தமிழ்ல போட்ற எல்லாத்தையும் இங்கிலீஷ்ல போட முடியாது. ஆனா இங்கிலீஷ்ல போட்ற எல்லாத்தையும் தமிழ்ல போடலாமே! அதனால... இதையும் போட்ருவோம்னு ஒரு முடிவு. கொஞ்சநாள் முன்னாடி, சில ஆவணங்கள் கொடுப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்துக்குப் போயிருந்தேன். அங்க இருந்த ஆள், கனிவான சிரிப்போடு, "சார், இது ஒரே பேப்பர்ல முன்னும் பின்னும் பிரிண்ட் பண்ணக் கூடாது. பரவால்ல. குடுங்க" என்றார். ஆனாலும், "இப்பிடிப் பிரிண்ட் பண்ணக் கூடாதுன்னு எந்த விதிமுறைல இருக்குன்னு காட்ட முடியுமா?"-ன்னு கேட்டுத் திமுர் பண்ணேன். விதி வலியது இல்லையா? இன்னைக்கு ஓர் அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாப் போனேன். அங்க இருந்த ஆள் ரெம்பக் கோவமாப் பேசுனாப்ல, "ஹலோ, இப்டிலாம் முன்னும் பின்னுமா ஒரே பேப்பர்ல பிரிண்ட் பண்ணக் கூடாது. போய்த் தனித் தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணிக்கிட்டு வாங்க". "சரி, சார்"-னு ரெம்பப் பவ்யமாச் சொல்லிட்டு (இதுல முக்கியமான மேட்டர் என்னன்னா, அவர் சாரெல்லாம் கெடையாது, அங்க இருக்கிற அல்லக்கை, அவ்வளவுதான்), குடுகுடுன்னு கொயந்த மாதிரி பிரிண்டிங் கடைக்குப் போனேன். அங்க போய், "இது கூடத்...

மனிதன்

எத்தனை விந்தைகளை மொந்தையாக்கியவன்

நம்பிக்கை

என்னால் அவர்களைப் போல் விண்வெளிக்கெல்லாம் பயணிக்க முடியுமா தெரியவில்லை முதன் முதலில் அ முதல் ஃ வரை சொன்ன அண்ணனைப் பார்த்து அடைந்த மாதிரியாகவே பிரமிப்பாக இருக்...

இதுவும் அதுவும்

இதுக்கு அது பரவாயில்லை என்றோம் அது இதுவானது இது அதுவானது இப்போதும் அதையே சொல்கிறோம் இதுக்கு அது பரவாயில்லை