இடுகைகள்

நாலாரம்

மன்னர் உள்ளே நுழையும் போதே அமைச்சர் சீவலப்பேரியாரின் பக்கம் திரும்பி: "அய்யர்வாள்! பாண்டியர்கள் ஏன் கொற்கையிலிருந்து கூடலுக்கு மாறினார்கள் என்ற தெளிவான விளக்கங்கள் உம்மிடம் இருக்கின்றனவா? அப்புறம் ஏன் தென்காசிக்கு மாறினார்கள்? இது பற்றியெல்லாம் இன்று இரவுக்குள் படித்து வந்து சொல்ல முடியுமா?" "கேள்விப்பட்டேன் அரசே! உங்கள் மனதில் ஓடும் குழப்பம் பற்றிக் கேள்விப்பட்டேன். நல்ல யோசனைதான். நாம் இப்போதே அனைத்தையும் மாற்ற வேண்டியதில்லை. இரண்டு தலைநகரங்கள் வைத்துக்கொள்வோம்." "அதுவும் உம் காதுக்கு வந்துவிட்டதா? கெட்ட காதய்யா உமக்கு!" "நல்ல காதென்று சொல்லும் அரசே!"  அமைச்சரின் முகத்தில் அதே வழக்கமான பெருமிதப் புன்னகை. * ஆனால் அங்கிருக்கிற அரண்மனை அவ்வூர்க்காரர்களுக்குத் தம் ஊரும் ஒரு தலைநகர வரலாறு உடையதுதான் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. எட்டயபுரத்து ஜமீனின் வடக்கு எல்லையாக இருந்ததால் இங்கும் ஓர் அரண்மனை கட்டினாராம் எட்டயபுரத்து மன்னர். முதலில் இரட்டைத் தலைநகரங்கள் வைத்துக்கொள்ள விரும்பித்தான் நாலாரத்தில் அரண்மனை கட்டினாராம். 12 மைல் தொலைவுக்கு அங்கி...

அண்டம்

நான் உள்வாங்காத காற்றை வெளியிட்டவர் நான் வெளியிட்ட காற்றை உள்வாங்காதவர் வந்து விளக்கினால் விளங்கிக்கொள்வேன் இந்தப் பேரண்டத்தின் அமைப்பை

வாய்மையிடத்து

அவனுக்கு நிலவாக  பூவாக  போதையாக  இருந்தவள்  இவனுக்கு  பெண்ணாக மட்டுமே  தெரிகிறாள் 

தாய்

படும் பாட்டையெல்லாம் அவளோடு பகிர்ந்துகொள்வதால் பயனென்ன இருக்கப் போகிறது? அவள் கவலையும் பெருகுவதன்றி படும் பாடெல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாதே என்றாவது ஒரு நாள் எல்லாத்தையும்  அவளிடம் சொல்லி அழுது தீர்க்க வேண்டும் அவள் அழுது தீர்த்த பின்தான்  சுமை குறையும்

அருமை

கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டிருந்த வேளைகளில்  வாட்டி வதக்கிய வெயிலை மறக்கவே முடியவில்லை  ஆங்காங்கே இளைப்பாறக் கிட்டிய நிழல்களையும் நிலத்தில் கால் படாது  தேருலா சென்ற பொழுதுகளில் எப்போதேனும்  சுரீரென்று மூஞ்சியில் சுட்டிருக்கத்தானே செய்யும்  அது மட்டும் எப்படி நிழலாகத் தொடரவில்லை!

பிற

"கட்டுனா அவளத்தான் கட்டுவேன். இல்லன்னா இப்பிடியே இருந்துட்டுப் போறேன்." "ராசா அப்பிடிப் பேசாத ராசா. உங்கப்பா இதெல்லாம் கேட்டாத் தாங்க மாட்டாரு. நானே மாமாவ விட்டுப் பேசச் சொல்றேன். நானும் உங்கம்மாட்டப் போய்ப் பேசுறேன். ரெண்டு பேர்ல ஒருத்தரு எறங்கி வந்துதானே ஆகணும். ரெண்டு பேரும் நாம் பிடிச்ச மொசலுக்கு மூணு கால்னு நின்னா எப்பிடி?" “நான் என்ன சீமைலயா போய்ப் பொண்ணு கட்டணுங்கறேன்? இந்தாருக்கு மாதலப்புரம். ஒன்ற மைல் தொலவட்டு. அதுக்கு எதுக்கு இம்புட்டு வீம்பு? பாத்துருவமே. நானா அவரான்னு. நாப்பத்தஞ்சு வயசுக் கெழவனுக்கு அம்புட்டு மொரண்டு இருந்தா இருபது வயசு எளவட்டம் எனக்கு எம்புட்டு இருக்கும்? நீங்க ஒன்னும் உங்கொண்ணங்கிட்ட எனக்காகப் பரிஞ்சு பேச வேணாம். நான் பாத்துக்கிறேன் எம் பிரச்சனய.” “இல்ல, ராசா. அவர் என்ன சொல்றாரு? நம்ம ஊர்ல இல்லாத பொண்ணா? நம்ம வம்சத்துலயே அந்தப் பழக்கம் இல்லையே ராசா. உள்ளூர்லயே சாதி மாறிக்கூட சம்பந்தம் செஞ்சிறலாம். ஊரு விட்டு ஊரு போயிச் செய்யிறது சாதாரணப்பட்ட வேலையா? நமக்கும் அவங்களுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது ராசா. அவங்க பேச்சு, பழக்கவழக்கமே வேற மாதி...

கர்ணன் பேசும் அரசியல்

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ பெரிதளவில் பேசப்பட்டாலும் எல்லோரும் சொன்னதைப் போல் மனதைக் குத்திக் குடையவில்லை. அதைவிட வெற்றிமாறனின் ‘அசுரன்’ கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது வந்திருக்கும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, ‘பரியேறும் பெருமாளை’ விடப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையில் வாழ்க்கையையும் மட்டும் பேசிய இலக்கியங்கள் பின்னர்தான் பாண்டிய நாட்டின் - கரிசல் பூமியின் பக்கமெல்லாம் வந்தன. உயர் - ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையை மட்டும் பேசிய இலக்கியங்கள் அடுத்து நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையைப் பேசின. பின்னர்தான் அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் வந்தன. அதற்குப் பின்னால் உயர் - ஆதிக்க வர்க்கத்தின், நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் படைப்பாளிகளும் இருந்தார்கள். அந்த வாழ்க்கையைப் பட்டு உணர்ந்த அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வெளிவந்த படைப்பாளிகளும் இருந்தனர். “என் வலியை உணர்ந்து அதை...