வைகோ என்றோர் அரசியல் ஏமாளி
இன்று ஸ்டாலின் படம் போடுவது போல் நான் சிறுவனாக இருக்கும் போது திமுக போஸ்டர்களில் பெரியார் – அண்ணா – கருணா – வைகோ படங்கள் போடுவார்கள். இரண்டே படங்கள் இருந்தால் ஒன்று இவருடையதாக இருக்கும். இடதுசாரிகள் போல் – பிஜேபி போல் – முறைப்படி தேர்தல் வைத்துத் தேர்ந்தெடுத்தால் அடுத்த தேர்தலில் இவர் வந்து விடுவார் என்று தொண்டர்களே எதிர் பார்த்த போது, ‘அப்படியானால் என் மகன் என்ன நாக்கு வழிக்கப் போவதா?’ என்று கோபப்பட்டு இவரை வெளியே வீசினார் தமிழினத் தலைவர். கொலைப் பழியும் சுமத்தி. ‘என்னைக் கொன்று தலைவனாகப் பார்க்கிறான்’ என்று குற்றம் சாட்டியதில் இருந்தே புரிகிறதா? எவ்வளவு பெரிய ஆளாக ஆகியிருந்தார் என்று. இன்று நடுத்தெருவில் நிற்கிறார். எப்படி நடந்தது? எங்கே தவறு செய்தார்? கள்ளத்தோணியில் பிரபாகரனைச் சந்தித்து விட்டு வந்தபோதெல்லாம் இவர்தான் தமிழகத்தின் கதாநாயகன். அப்போது பிரபாகரனும் பெரும் கதாநாயகன். இப்போது மிக மிகப் பரிதாபமான நிலையில் இருக்கிறார். அப்படியெல்லாம் இருந்துவிட்டு இந்த வாழ்க்கையை எப்படிச் சமாளிக்கிறார்? மீள்வாரா? தெரியவில்லை. காற்று இந்தப் பக்கம் அடிக்குமா? தெரியவில்லை. இடையில் நடந்தது என்ன? அது நன்றாகத் தெரியும். இடையில் நடந்தது எல்லாமே தப்பு. பாதி அவருடையது. மீதி விதியினுடையது.
தமிழக அரசியலில் எல்லோரும் படித்துப் பாடம் கற்க வேண்டிய ஒரு வாழ்க்கை இவருடையது. 17 வருடங்களுக்கு முன்பு அவர் திமுகவை விட்டு வெளியேற்றப் பட்ட போது (வெளியேறியபோது என்று சொல்ல மாட்டேன்) பாதிக்கும் மேலான செயற்குழுவும் பொதுக்குழுவும் இவரோடு சேர்ந்து வெளியேறியது. கட்சியையே இவர் கைப்பற்றக் கூடும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது வந்த பாதிப்பேர் கண்ணாடி (எம்.ஜி.ஆர். தொப்பி என்றால் இவர் கண்ணாடி; அடுத்து வந்தது பவுடர் என்று சொல்லலாம்; மொத்தத்தில் நாம் அழகு சாதனப் பொருட்களுக்கு ஏமாந்தவர்கள் என்பது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை!) கூட்டிய செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் கலந்து கொண்டு கையெழுத்துப் போட்ட போது சிறுவனாக இருந்த எனக்குக் கணக்கு சரியாகப் புரியவில்லை. அதெப்படி இருவர் கூட்டத்திலும் பாதிக்கும் மேல் கூட்டம் சேர்ந்தது என்று. அரசியல் என்பது இது போன்ற தராதரங்கள் எல்லாம் எதுவும் வைத்துக் கொள்ளாத முற்றிலும் மாறுபட்ட தொழில் என்பது புரிந்து கொண்டபின்தான் குழப்படி பற்றி ஓரளவு புரிந்தது (அவர்களுடைய கணக்கு நாம் பள்ளியில் படித்த கணக்கைவிட வேறுபட்டது!). அவருக்கும் புரிந்திருக்கும் ‘எப்படிப் பட்டோரை நம்பி இறங்கி விட்டோம்’ என்று. நல்ல கட்சியில் இருந்திருந்தால் நல்லவர்கள் உடன் வந்திருப்பார்கள். அரசியலைத் தொழிலாய்ப் பண்ணுபவர்கள் நொடித்துப் போன தொழிலை எதற்காகத் தொங்கிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? அதுவும் எவ்வளவு நாள்தான் தொங்கிக் கொண்டிருப்பார்கள்? காங்கிரசில் இருந்திருந்தால் கூட ஒரு மத்திய மந்திரி ஆகியிருப்பார். சரி, அது கிடக்கட்டும். விதி வலியது அல்லவா? நாம் என்ன செய்ய முடியும்?
தனிக் கட்சி தொடங்கியதும் வந்த முதல் இடைத் தேர்தலிலும் நல்ல வாக்குகள் வாங்கினார். அவர்தான் தமிழகத்தின் எதிர்காலம் என்றெல்லாம் எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தோம். 96 தேர்தல் வந்தது. மொத்தத் தமிழகமும் செல்வியின் இராட்சச ஆட்சி மேல் வெறி கொண்டிருந்தது. காங்கிரஸ் உடைந்தபோது உருவான தமாகா திமுகவுடன் சேருவது போல விதி வேலை செய்தது. இன்று செல்வியை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விட வேண்டும் (அல்லது படுக்க வைத்து விட வேண்டும்) என்று வேலை செய்து கொண்டிருக்கிற அதே மாமாதான் அப்போது செல்வியை அடித்து விரட்டும் வேலையில் தீவிரமாக இருந்தார். கருணாநிதியையும் மூப்பனாரையும் கைகோக்க வைத்துப் பத்திரிகைகளில் சிரித்தார். அதிலிருந்துதான் வைகோவுக்கு இராகுகாலம் ஆரம்பித்தது. அன்று முதல் இன்றுவரை மாமாவும் தெரிந்தோ தெரியாமலோ வைகோவுக்கு ஆப்பு வைத்துக் கொண்டே இருக்கிறார். காட்டாட்சிக்கு எதிரான காட்டாற்று வெள்ளத்தின் அலையில் காணாமல் போய் விட்டார் தனித்துப் போட்டியிட்டவர். அப்போதைக்கு அவரிடம் வேறு வாய்ப்பு ஏதும் இருக்கவில்லை. விவரமாக – விரைவாகப் பேசி மூப்பனாரைத் தன் பக்கம் இழுத்திருந்தால், தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் அன்றே மாறியிருக்கும். இவ்வளவு பெரிய ஊழல்கள் எல்லாம் இன்று நடந்திருக்காது. அது கூட முடியாத வேலை என்று வைத்துக் கொள்வோம். அவருடைய உச்சகட்ட ஏமாளித்தனம் அல்லது கோமாளித்தனம் என்று நான் நினைப்பது மத்திய ஆட்சியில் பங்கு பெரும் வாய்ப்புக் கிடைத்த போது வெளியில் இருந்து ஆதரிப்போம் என்றொரு பைத்தியக் காரத்தனமான முடிவு எடுத்ததுதான். தவறான புத்தகங்களைப் படித்து விட்டு, இப்படியெல்லாம் நடந்து கொண்டால் தியாகி என்று பெயர் கிடைக்கும் – மக்கள் மதிப்பார்கள் என்றெல்லாம் தவறான முடிவு எடுத்ததுதான். குள்ளநரித்தனம் சாணக்கியத்தனம் என்றும் கொழுப்பெடுத்த செயல்பாடுகள் தைரியம் என்றும் மறு விளக்கம் கொடுக்கப் பட்டுள்ள அரசியல் உலகில் தியாகத்துக்கு மரியாதை கிடைக்கும் என்று நினைத்தது யார் தப்பு? கடைசியில் இவருக்குரிய மந்திரி சீட்டையும் சேர்த்து, “அதுவும் எங்களுக்குதான் சொந்தம்; ஏன்னா அவர் எங்க ஆளு” என்று சொல்லி, மன்மோகன் சிங்குக்கும் இவருக்கும் ஒரே கல்லில் இரண்டு அல்வா கொடுத்துவிட்டு, கொள்ளைக்கூட்டம் மொள்ளமாரித்தனம் செய்தது.
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் போது எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்து விட்டு, கடைசியாக ‘சிவகாசி’ என்று சொல்லி, சிறிய இடைவெளி விட்டு, தெரியாத வேறொரு பெயரைச் சொன்னபோதும் அவர் எதிர் பார்த்தது தியாகி என்ற பெயரும் கைதட்டலும் மட்டுமே. ரஜினிகாந்த் போல கைதட்டல் வாங்க நினைத்தவரை வடிவேல் போலப் பார்க்க ஆரம்பித்தது தமிழகம் அது முதல். நாடு முழுக்க வென்றபின் சோனியா வேறு வழியில்லாமல் செய்து வாங்கிய பெயரை அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கே வழியில்லாத கட்சியை நடத்திக் கொண்டு செய்து வாங்க நினைத்தால் அதன் பெயர் என்ன? ‘இந்த ஆள் எதற்காகத்தான் கட்சி நடத்துகிறார்? நாமெல்லாம் ஏன் இவர் பின்னால் அலைந்து யாருக்கும் பயனில்லாமல் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்?’ என்று அவருடைய கட்சிக் காரர்களே கேட்க ஆரம்பித்தார்கள். தக்க நேரத்தில் ஸ்பெக்ட்ரம் காசைக் கொண்டு வந்து அவர்களை எல்லாம் அள்ளிக் கொண்டு போய் விட்டார்கள் கொள்ளைக்காரர்கள்.
அதற்கடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில், மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், இவர் மட்டும் கொடுக்கிற சீட்டை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று தொங்காய்த் தொங்க, ‘கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்குப் போக வேண்டும்’ என்று சொன்னோரேல்லாம் இப்போது இருப்பது திமுகவில். ஒரு கட்சியில் செயற்குழு – பொதுக்குழு என்றெல்லாம் பேசினால் சிரி சிரியெனச் சிரிக்கிறார்கள். அரசியலில் அப்படி ஒன்று இருக்க வேண்டும் என்பதே அவர்கள் தலைவிக்கே தெரியாதாம். இன்னொரு கட்சியில் அது பற்றிப் பேசினால் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். “அதெல்லாம் வெறும் பெயருக்கு; சும்மா தலைவர் அப்படியெல்லாம் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு இப்படியெல்லாம் விளக்கம் கேட்காதீர்கள்” என்கிறார்கள். ஆக மொத்தம் இரண்டு இடங்களிலும் முடிவு எடுக்கப்படும் இடம் வீடுதான். வெளியில்தான் காமெடி பண்ணுகிறார்கள். நீங்கள்தான் அதில் ஏமாந்து போய் உண்மையாகவே கட்சிக்காரன் பேச்சையெல்லாம் கேட்டு சரியாகத் தவறான முடிவுகளை எடுக்கிறீர்கள்.
இவர் மட்டுமில்லை. தமிழகத்தில் இருந்து பலர் போய் விடுதலைப் புலிகளைச் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களிடம் காசும் கூட வாங்கியிருக்கலாம் தேர்தல் வேலைக்கோ கட்சி நடத்தவோ. அவர்கள் எல்லோருமே செய்த ஒரு புத்திசாலித்தனமான வேலை - சரியான நேரத்தில் விடுதலைப் புலிகளை விட்டு விலகி நிற்பது போல் நடிப்பது. அதையும் செய்யத் தெரியவில்லை இவருக்கு. இன்றுவரை, பழகிய பழக்கத்துக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனம்தான் அவரை இந்தப் பாடு படுத்துகிறது. மருத்துவரிடம் கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் – அரசியலில் எப்படி அணி மாற வேண்டும் என்பது பற்றி. மூன்று முறை அணி மாறிய இவரைக் குறை சொல்பவர்கள் ஒவ்வொரு முறையும் மாறும் அவரைப் பாராட்டுகிறார்கள். காரணம் என்ன? அவர் வேறு எது பற்றியும் கவலைப் படுவதில்லை. வெல்லும் அணி எதுவென்று சரியாகக் கணித்து மாறுகிறார். இவரை வெல்லப் போகும் நேரத்தில் கழட்டி விடுவார்கள். தோற்கும் அணியில் போய்ச் சேருவார். கிரிக்கெட் ஆனாலும் அரசியல் ஆனாலும் தொழில் ஆனாலும் வெல்பவன் எதைச் செய்தாலும் சரி; தோற்பவன் எது செய்தாலும் தவறு. நீங்கள் படிக்கும் உலக வரலாற்றுப் புத்தகங்களில் இதெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். அதுதான் பிரச்சனை.
அடுத்தது ஜாதி ஓட்டு. முதன் முதலில் நீங்கள் கட்சி ஆரம்பித்த போது கோயம்புத்தூரில் இருக்கும் உங்கள் உறவினரெல்லாம் ‘மனவாடு’ ஒருத்தர் வரப்போகிறார் என்று அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள் மில்களில் சம்பாதித்த பணத்தை எல்லாம். போன முறை என்ன ஆனது தெரியுமா? எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கிற உங்கள் உறவினர்களே கொடுத்த காசுக்குத் துரோகம் பண்ணக் கூடாது என்று கைச் சின்னத்துக்குப் போட்டு விட்டார்கள். பதினேழு வருடமாக ஒரு பதவியும் பெற முடியாத – ஒரு பயனும் பெற்றுத் தர முடியாத ஒருத்தர் யாராக இருந்தால் என்ன என்று கிளம்பி விட்டார்கள். அந்தக் காலத்தில் திமுக மேடையில் உங்கள் உறவினர் ஒருவர் உங்களிடம் தெலுங்கில் பேசியபோது நீங்கள் கோபப்பட்டதை இப்போதும் எங்கள் ஊரில் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் – ஓட்டு மட்டும் வேறு யாருக்காவது போடும் எம் உறவினர்கள். நான்தான் உண்மையான தமிழன் என்று சொல்லிக் கொள்வோரே செய்யப் பயப்படும் காரியங்களை எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் செய்து வருகிறீர்கள். ஆனாலும் உங்கள் அடையாளத்தைப் பற்றி அவ்வப்போது மானங்கெட்டவர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டேதான் இருக்கிறார்கள். பெரியார் வழி வந்த ஒரு திராவிட இயக்கத்தின் பெயருக்குள் மறைந்திருக்கும் செல்வி கூட தமிழகத்தில் 2% ஓட்டு மட்டுமே கொண்ட தன் மக்கள் அதிகமிருக்கும் தொகுதிக்குத் துணிந்து போய் விட்டார். நீங்கள் இன்னமும் விஜயகாந்தைப் போய்ப் பார்க்கப் பயப்படுகிறீர்கள்.
உங்கள் கட்சி வென்ற திருமங்கலத்தில் இடைத்தேர்தல் வந்தபோதும் கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் தன் கட்சி வேட்பாளரை அறிவித்தார் உடன்பிறவா சகோதரிக்கு மட்டும் பயப்படும் உத்தமி. அதற்கும் பேசாமல் இருந்தீர்கள் - உங்கள் வேட்பாளருக்குச் செய்வதை விட அதிக பட்ச உணர்வோடு போய் வேலை செய்தீர்கள் அங்கும். அதை அந்தம்மாவின் திறமை என்றும் உங்களின் பைத்தியக்காரத்தனம் என்றும் பேசினார்கள் திமிரைத் திறமை எனும் சில புத்திசாலிகள்.
நேற்று முன் தினம் நடந்ததை விடப் பெரிய அவமானம் வேறு என்ன நடக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? உங்களுக்கிருக்கும் நாலு பேர் கூட இல்லாத எங்கள் தா.பா. கூடக் கோபப்பட்டார். நீங்கள் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்? ‘கண்ணியம் காக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு கோபத்தைக் காட்டும் தொண்டர்களையும் கண்டிக்கிறீர்கள். கண்ணியம் யாரிடம் காக்க வேண்டும் என்று கூடவா உங்களுக்கு வாழ்க்கை இன்னும் கற்றுக் கொடுக்க வில்லை. இன்று இரவு உங்கள் டைரியில் எழுதிக் கொள்ளுங்கள். நேற்று கோபப்பட்டவர்களுக்குக் கூட நாளை மரியாதை கிடைக்கும். கண்ணியம் காத்த உங்களைப் படு கேவலமாக நடத்துவார் தைரிய லட்சுமி. அய்யா, மதிப்பவர்களை மதிப்பதில்ல எங்கள் பண்பாடு. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். மதியதோரைக் கண்டால்தான் பயந்து மதிப்போம். விஜயகாந்துடன் தேர்தலுக்கு முன்பே சண்டை வந்தாலும் வரலாம். ஆனால் பாருங்கள். அவருடைய மரியாதையை யாரும் குறைக்க முடியாது. ஏனென்றால் அவருக்குச் சாக்கடையில் எப்படிச் சண்டை போட வேண்டுமென்று தெரியும். அதைப் படியுங்கள் முதலில். கண்ணியம் காக்க விரும்பினால் கட்சியைக் கலைத்து விட்டு அமெரிக்கா போய் விடுங்கள். மகள் வீட்டில் பேரப் பிள்ளைகளைக் கொஞ்சிக் கொண்டு கண்ணியமாக விளையாடலாம்.
மேடையில் காட்டும் ஆவேசத்தில் பாதி கூடக் கூட்டணிக் கட்சியிடம் காட்ட மறுக்கிறீர்கள். கட்சி நடத்துவது நான் எழுதுவது போல எளிதான வேலை இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இவ்வளவு சோப்லாங்கியாக இருக்கக் கூடாது நீங்கள். என்னதான் நினைக்கிறீர்கள் என்று எங்களுக்கும் சொல்லுங்கள். கொஞ்சமாவது ரோஷப்படுங்கள். ஒன்றுமில்லையானால் இதற்குப் பின்னால் இருக்கும் சோ அல்லது இராஜபக்சேயையாவது திட்டுங்கள் (நீங்கள் நம்ப மாட்டீர்கள் – ஆனால், இதில் இராஜபக்சே தலையீடு இருப்பதாகக் கூட சில நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன). உங்களை விட இராஜபக்சேக்கு இங்கே நண்பர்கள் அதிகம் இருப்பதுதான் நிரம்ப வருத்தமாக இருக்கிறது. வழக்கம்போல் இந்த முறையும் தவறான முடிவு எடுத்து விட்டீர்கள் என நினைக்கிறேன். அதிகமாக அவமானப் படுத்தப் பட்டவர் என்ற முறையில் நீங்கள் அல்லவா முன்னின்று நடத்தியிருக்க வேண்டும் மூன்றாவது அணிக்கான பேச்சு வார்த்தையை? இப்படி ஒளிந்து கொண்டால் எப்படி? கார்த்திக்குடன் கூட்டணிக்குத் தயார் ஆகி விட்டீர்கள் போலிருக்கிறது. வாழ்த்துக்கள். இவ்வளவு சீரியசான ஆளை இந்த அரசியல் காமெடியனாக ஆக்கப் போகிறதே என்று கவலையாக இருக்கிறது...

Sariyaka sonneerkal
பதிலளிநீக்குNandri nanbare!
பதிலளிநீக்குyen nam makkal nallavargalai aatharippathillai,thirudargal endru therinthum avargalaye thernthu edukirargal...
பதிலளிநீக்குI think it is vaiko's character to blame! i think he never won an election. he was always a rajya sabha MP. so he is always scared of contesting. when he gave a support to central ministry from outside, i think even that is he didn't like his partymen to enjoy the post.
பதிலளிநீக்குThe big mistake he did was he surrendered to Jaya and behaved like her partymen.
also i dont accept he got lot of people with him when he came out of dmk. he contested and got only 4-5 % of votes.
i think he is in this position because of 'PORAMAI'
அருமையானப் பதிவு. எல்லோருக்கும் இருக்கும் நியாயமான உள்ளக் குமுறல்கள்.!!
பதிலளிநீக்கு@Kanna- Panam, Jaathi, Pechu, Vidhi, Inam puriyaadha kavarchi, Yaar vandhaal enakku laabam endru paarkkira suyanalam... ippadi ethanaiyo therindha kaaranangal. Ethanaiyo theriyaadha kaaranangalum irukkindrana. Avatrai thaan vidhi endra ore peyaril solkiren. Adhai vida melana kodumai ondru ennavendraal 1950-il enga thatha indha katchikku pottar. Adhilirundhu naangal ellorume adharku thaan poduvom enum oru arthamatra pokku. Kollaiyum karpazhippum en veettil nadakkadhavarai nalladhu endru nyaaya paduthum gunaadhisiyam enakku indru varai manidha samookathin mariyaadhaiyai kuraikkum ondru.
பதிலளிநீக்கு@Elangovan- I would surely blame it on his character too. But, I don't know if it was 'poramai'. Why would he deny the cabinet berth that was given to him also then? I thought it was some kind of foolishness.
பதிலளிநீக்குYes. He couldn't win elections in makkal mandram. But, I am 100% sure about his number in general and working committee when he came out of DMK. It has gone on records. I would like you to have it checked with your reliable sources.
@தெம்மாங்குப் பாட்டு- நன்றி நண்பரே!
பதிலளிநீக்குThe biggest mistake Vaiko ever done is coming out of DMK. Vaiko, T. Rajendar (Yes, I mentioned him only) are the two persons you can quote who has done the same mistake after being at the same circumstances. Let me tell you how, I still remember Vaiko & T. Rajendar's herculian tasks of keeping the party afloat during MGR's ruling period. That time is the most critical time for DMK. These two guys stoodfast with DMK when others from social & film fraternity literally feared to be assiciated with DMK because of MGR. Yet after all these hardwork they were sidelined cleverly by Karunanidhi when he thought they might be a contender for Stalin. We don't have to get into whether Karunanidhi is right or wrong in thinking that way. Let us see about these two unfortunate souls. They should have been sticked with DMK forever like any other DMK leaders and then after Karunanidhi's time, they should have tried to get the party in their hold. They should never ventured out of DMK. Pagaivanai uravadi kedu. Sila nerangalil nanbargalaium. Athu than arasiyal. Nobody cares about loosers. I still remember Vaiko's meet with Thambi in Eelam. I still remember TR's song against MGR rule during those times during election campaign. "Lanjam, lanjam oorellam lanjam, Raavunna 400 milli, oothikada en pera solli." He is the only person who boldly stood against MGR and yet shined in Filmdom and Arasiyal.
பதிலளிநீக்கு@Jay- Very interesting views indeed. We should write about TR also in detail once. It might be funny today. But, I remember someone very close to me in my childhood saying he would be the CM of TN one day in future. And, believe me it was not such a joke then. He is another good case study for "hero-to-comedian".
பதிலளிநீக்குhmmmm, office'la mgmt says 'make use of talents/resources'.. wish we say tht in politics too!!
பதிலளிநீக்குஅருமையானப் பதிவு.
பதிலளிநீக்கு@Arun - நன்றி நண்பா!
பதிலளிநீக்கு@Suresh- Surukkamaaka... sariyaaka chonneerkal...
பதிலளிநீக்குபதிவு அருமையாக இருந்தது. இதை அவரும் படித்து ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் மிகவும் மகிழ்ச்சி.... :-)
பதிலளிநீக்குநன்றி நண்பரே. அதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பார்க்கலாம். :)
பதிலளிநீக்குExcellent Post......You echo my thoughts on VaiKo, once proudly caled as "ADANGA KAALAI" but now has become an ________.....it pains to see his erratic political career graph
பதிலளிநீக்குThanks Syed. Nice to hear that.
பதிலளிநீக்குThanks to BarathiRaja for the excellent post. visiting your blog for the first time and liked it so much. Keep writing. Thank you Jay for the interesting analysis.
பதிலளிநீக்குThanks nanbare. Please keep visiting.
பதிலளிநீக்குHi Barathi, Very nicely said, even myself used to lament with my colleagues and friends that why this man is living like a fool, we are really missing the guseful brain in central - meaning a potential cabinet minister.... serakoodathavanga kooda sernthu eppadi irunda evaru ippadi ayitaru!!!!!!!!!! Let's wait and see how he reacts to your feedback...Thanks keep writting....
பதிலளிநீக்குRaju
Hi Raju, Thanks for the feedback. Happy to see more and more people having similar views. He should get his fair share at some point in his lifetime. Let's see how it goes.
பதிலளிநீக்குIt's a well written article.
பதிலளிநீக்குAnd also has logical presentation and history with satire.
Thank you so much, Raphel!
பதிலளிநீக்குGOOD ARTICALE
பதிலளிநீக்குThank you, Adam!
பதிலளிநீக்குFirst time visiting your blog Thank you for the Excellent Article and Jay view of analysis is interesting
பதிலளிநீக்குThanks nanbare!
பதிலளிநீக்குRead this blog today. Very good one. I had the same thoughts when Vaiko did not contest the election.
பதிலளிநீக்குHowever, when the results came, it is a bit different. If he had contested, the only thing is DMK, Congress would have won few more seats. ADMK's vote bank would have got split.
There is nothing much we can expect from Jayalalitha too.
Thank you. Yeah, it was not a bad idea. Now, we have to wait and watch how he is going to handle in future.
பதிலளிநீக்குஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.
பதிலளிநீக்குதினமணி மூலம் உள்ளே வந்தேன். நல்ல பதிவுகளை சிந்தனைகளை இங்கே இனம் கண்டது மிக மகிழ்ச்சியாய் உள்ளது.
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஜோதிஜி. தொடர்ந்து உங்கள் ஆதரவைப் பெற விரும்புகிறேன்!
பதிலளிநீக்குநல்லவனாயிருப்பது அரசியலுக்கு சரிவராது என்பதற்கு வைக்கோ உதாரணம்.எல்லோருமே இவரை நல்லவர் என ஏற்கின்றனர். ஆனால்...?
பதிலளிநீக்குநன்றி ஜெகன். உண்மை. இருந்தே ஆக வேண்டும் என்றால், இருக்கலாம். ஓர் ஓரமாக இருந்து கொள்ள வேண்டும். பெரிதாக எதுவும் ஆசைகள் இருக்கக் கூடாது.
பதிலளிநீக்குJust a follow-up post about TR. I thought to write about this as it happened in June last year. I was waiting in the baggage area in MAA airport on the way from CJB to JFK. I met TR who was traveling from IXM to MAA. His baggage belt was incidentally next to mine. I met means, I made myself to go near to have a chat. Chat in the sense, I almost thought to inform him what I thought about him. Like, how he started, how he erred and how he is now. I even thought to inform what I think he should do now to gain importance. But,,,,,, the truth is,,,,,he is not the fellow that I was having in my mind all these. I never saw a politician who conducts himself so carelessly in public. He was just dancing slowly and behaved like an idiot. In that moment, I decided to give more respect to Kalaignar as he judged him cleverly and kept him where he belongs. I thought TR would not even understand what I would talk, as he was in that state. One thing crossed my mind,,,being a politician is not a mean task. However, I wonder how he responds at times cleverly even now. His response to Khusbhu joining DMK was hilarious.,,,, itha vida ‘thi mu ka’-vukku kevalamana nilamai vanthathu illenu ezhithikonga sir--- is what his response. I am really yearning for someone nowadays to come forward and talk about idealogy politics. DMK was formed for a reason. Let it not, go unnoticed. Vaazhgha Thamil.
பதிலளிநீக்குThanks for coming back and providing your follow-up comment, Jey.
பதிலளிநீக்குInteresting! But, I wouldn't have done that mistake. :)
He really had such an opportunity but today he is an utter meaningless soul on earth. People watch his videos for fun but he takes it so seriously and brags about that also. These days, every time I see him on TV, he invariably behaves like a clown.
That way, there is no comparison between Vaiko and him. Any day!
Yes, I agree Bharathi. He is no comparison to the great Vaiko.
பதிலளிநீக்குMore than Vaiko, I am eagerly waiting for Sankarankovil bye-election results. Tamilnadu people will be the luckiest if Vaiko captures DMK and then becomes CM (Yes, anyone can become CM, but DMK chief post is mightier. In all the DMK conference invitations, you could see that the District Secretary's name listed first and then follows the MP, MLA, Ministers. Party post is mightier).
Me too. But, I heard that MDMK will mostly finish third in Sankarankovil, which itself is good for him because DMDK in fourth place is going to be a big humiliation for Vijayakanth, the opposition leader. It is the caste calculations that will decide the fate of parties in this by-election, they say. If at all people are not showered with money! For money is more powerful than caste for our people, you see. :)
பதிலளிநீக்குYes. Agree with you on your comment about DMK. DMK has some amount of intra-party democracy compared to many other parties. They are predictable. Every district secretary would become a minister provided the test of election is cleared by him/her. That's not the case with ADMK. It's completely to up to their thalaivi's whims and fancies.
Vaiko is very goog mankind and Thalpathy, but he is unfit to leader, he is true man.
பதிலளிநீக்குThanks Razik. Yes, that's what we have talked about. It's also about how we define leadership, right! :)
நீக்குA very good parliementarian,orator, organiser, bold leader is yet to be supported by the masses who were made to become selfish by the power mongers. In india especially tamil nadu politics and cinema are identical; In both the fields , capable persons are rarely recoginsed. We select our representatives on petty grounds such as caste, attraction, and recent petty happenings. Tamil nadu will have to regret oneday for its failue to select right person like Vaiko.
பதிலளிநீக்குThanks for your comment, Mr. Rajendran. True. It's never a failure of the individual who lost the opportunity. It's the failure of the people who gave the opportunity to wrong people. If you look at it from Vaiko's perspective it's just an individual's failure. But, if you look at it from Tamil Nadu's perspective, it's a huge failure for the entire state. Having said that, there is no doubt that there are better leaders than Vaiko in the same land. But, all those who are on top at the moment are nowhere close to his stature as a leader.
நீக்கு