இடுகைகள்

ஏப்ரல், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சூட்சுமம்

படம்
அன்புள்ள நண்பா, உன்னைப் புகழ்வதெல்லாம் உருத்தல் சிறிதுமின்றி உண்மையோவென்றெண்ணி ஏமாந்து போயெனக்கு நன்றியுரை தயாரிக்க வேண்டியதில்லை உன் மீது கொண்ட அதீத அன்பு காரணமாக அப்படியெல்லாம் மிகைப்படுத்துகிறேனென்று தன்னடக்கத்தோடு தன்னிலை விளக்கம் பேச வேண்டியதில்லை உன்னைத் துதிபாடி உளம் மயக்கி உன்னையும் ஊரையும் ஏமாற்றி ஏதேதோ ஆதாயங்களடைய முயற்சிக்கிறேனென்றெண்ண வேண்டியதில்லை உண்மையைச் சொல்லவா? அதை விட்டால் இப்போதைக்கு எனக்கு வேறு வழியில்லை அதைச் செய்யாவிட்டால் நான் பொறாமைக்காரனாகி விடுவேன் எல்லோரோடுமிணைந்து போகுது மயிரென்றொருமுறை பொய்யாகப் புகழ்ந்து விட்டால் உனைவிடப் பெருமை எனக்கே என்கிற சூட்சுமமறிந்து ஊரோடு ஒத்தூதுகிறேன் அவ்வளவுதான்!

நல்ல வேளை... ஹசாரேவிடம் தோற்றோம்!

படம்
நம் எல்லோருக்குமே அன்னா ஹசாரேவின் இயக்கம் போல ஒன்று வேண்டும் என்ற ஆசை இருந்தது. நாமே அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் ஒருவருக்கும் இல்லை என்றபோதும் நம் எல்லோருக்குமே ஏதாவது நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நம் ஒருவருக்குமே என்ன செய்வதென்று தெரியாத போது அவர் ஒரு வழி கண்டு பிடித்தார். மனம் இருந்தது. எனவே, மார்க்கமும் இருந்தது. இந்த எண்ணம், தெலுங்கானாப் புகழ் - பிரிவினை அரசியல்வாதி சந்திரசேகர் ராவிடமிருந்து அவருக்கு வந்ததோ என்று கூடத் தோன்றியது. எந்த ஒற்றுமையும் இல்லாத இந்த இரு மனிதர்களையும் ஒப்பிடுவதன் மூலம் நான் ஒரு மாபாவம் செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அதற்காக மன்னிக்கவும். ஒட்டு மொத்த நடுத்தர வர்க்க இந்தியாவும் அதன் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் (ஆம், இது திரு. ஹசாரே அவர்களின் வெற்றி மட்டுமல்ல; வெறுப்பில் இருக்கும் ஒட்டு மொத்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் வெற்றி), பல அரசியல்வாதிகளும் மற்றோரும் இந்த காந்தியவாதியின் அணுகுமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சில விபரமான ஆசாமிகள் இப்போதே அவர...

பிடிவாதங்கள்... பிடிக்காவாதங்கள்...

படம்
மண் வாசனை மிக்க பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் மனம் கிறுக்குப் பிடித்தது போல  ஏடாகூடமாக ஆடத் துடிக்கிறது சின்ன வயதில் கேட்ட  கொட்டுச் சத்தம் ஒயிலாட்டக் காரர்களின் காற்சலங்கையொலி நாட்டுப்புறப் பாடகர்களின் முரட்டுக் குரல் இவையெல்லாமே இப்போதும் மனதுக்குள் புழுதியைக் கிளப்பி அருள் வரச் செய்கின்றன எப்போதாவது இரவு நேரப் பயணங்களில் ஊதக் காற்றில் காதைப் பொத்திக் கொண்டு பாதியாகக் கேட்க நேரிடும் பழைய பாடல்கள் பைத்தியம் பிடிக்க வைக்கின்றன ஆனாலும் "பழைய பாடல் போல  புதிய பாடல் இல்லை" என்ற பழைய பாடலின் வருத்த வரி  எங்கோ இடிக்கிறது பழமை  எப்போதுமே பெருமைதான் அதுவும் ஒருநாள்  புதுமையாய் இருந்ததாலும் புதுமைக்கு முன்பே புழக்கத்துக்கு வந்ததாலும் அதுவும் ஒருவித நன்றிக்கடனே ஆனால்  அதுவே சிலநேரம் அடிமைத்தனமோ?! என்றொரு குழப்பம் எப்போதுமெனக்கு எனவே பழமை மட்டுமே பெருமை என்று பேசும் பிடிவாதங்கள் மட்டும்  எப்போதுமே எனக்குப்  பிடிக்காவாதங்களாகவே இருக்கின்றன! புதுமைக்கு மட்டுமே கொடிப்பிடிக்கும்  கொடுமையைப் போலவே...

பெருந்தலைகள் முட்டும் தொகுதிகள்!

படம்
இந்தத் தேர்தலில் பெருந்தலைகள் முட்டும் தொகுதிகள் என்று பார்த்தால் கொளத்தூர், விழுப்புரம், ரிசிவந்தியம், மடத்துக்குளம், பேராவூரணி, திருப்பத்தூர், இராமநாதபுரம், தென்காசி ஆகிய எட்டுத் தொகுதிகளைச் சொல்லலாம். இதில் முதன்மையானது கொளத்தூர். மொத்தத் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியும் வென்று கொளத்தூரில் அதன் வேட்பாளரும் வென்றால் உடனடியாகவோ அல்லது சில மாதங்கள் கழித்தோ முதல்வராகப் போகிறவரும் மொத்தத் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும் வென்று கொளத்தூரில் அதன் வேட்பாளரும் வென்றால் சிறிது காலம் (!) அமைச்சராகப் போகிறவரும் நேருக்கு நேர் மோதும் தொகுதி. சைதை துரைசாமி அமைச்சராகப் போகிறவர் என்பது மட்டுமில்லை. தமிழகத்தில் திருட்டுப் பயகள்தான் அரசியலில் இருக்க முடியும் என்று ஆகிவிட்ட ஒரு காலகட்டத்தில் அரசியலில் இருந்து கொண்டே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத மாதிரியான சேவை ஒன்றைச் செய்து கொண்டிருப்பவர். கட்சியில் அ.தி.மு.க. என்றாலும் சிந்தனையில் இடதுசாரி என்கிறார்கள். மேயராக இருந்த காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல நிர்வாகி என்று பெயர் எடுத்தவர் இன்றைய துணை முதல...

தேர்தல் நாள்

படம்
நாடு மதிச்சதில்லை வீடு மதிச்சதில்லை தாய் மதிச்சதில்லை சேய் மதிச்சதில்லை நாய் கூட மதிச்சதில்லை நாலு வாரம் முன்பு வரை போன ஒரு மாசம் ஊரெல்லாம் கொண்டாட்டம் ஒரே திருவிழாக் கூத்தாட்டம் வெள்ளை வேட்டிக்காரரெல்லாம் விரட்டி விரட்டி மதிச்சார்கள் வீடு தேடி வந்தார்கள் கரை வேட்டிக்காரரெல்லாம் காசு கொடுத்து மதிச்சார்கள் காலில் கூட விழுந்தார்கள் இம்புட்டு நாளாக எனக்கே தெரியவில்லை எம்புட்டுப் பெரிய ஆளு இந்த நாட்டுக்கு நானென்று போதை இறங்கும் முன்பே பேதை ஒருத்தன் சொல்லுகிறான் இன்றோடு முடிந்ததெல்லாம் இனி திரும்பவும் நான் செல்லாக்காசாம் ஏப்பு! அடுத்த தேர்தலெப்போ? அதைக் கேட்டுக் கொஞ்சம் சொல்லுங்கப்பு... அஞ்சு வருசம் காக்கணுமா? அதுக்கிடையில் வாய்ப்பிருக்கா?

முட்டாள் தினச் சிறப்புச் செய்தி

படம்
முட்டாள் தினச் சிறப்புச் செய்தி: தலைவர் கலைஞர் நக்கீரன் பத்திரிகை மீது கடுமையான காட்டத்தில் உள்ளார். காரணம் - அஞ்சு ரூபாய் கொடுத்தால் அம்பது ரூபாய்க்கு வேலை பார்க்கும் அவர்களின் அதீத ஆர்வக்கோளாறு காரணமாக உடன்பிறப்புகள் அதிகமாக நக்கீரன் படிக்க ஆரம்பத்ததில் முரசொலி விற்பனை பாதிப்பு. பின் குறிப்பு: எல்லோருக்கும் வருடாவருடம் வரும் ஏப்ரல் 1 முட்டாள் தினமாக இருக்கலாம். எனக்கு மட்டும் என்னவோ அது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தல் நாள்தான்.

தனிமை எனக்கிலை

படம்
தனிமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை நான் ஏனென்றால் அப்போதெல்லாம் என்னிடத்திற்கு உனைக் கொணர்கிறேன் அல்லது உன்னிடத்திற்கு எனைக் கொணர்கிறேன் அல்லது இருவருமாய் வேறெங்காவது பயணிக்கிறோம்! * 2001 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

பிடித்த பாட்டிகள்

படம்
சின்ன வயதில் எவருக்கும் பிடிக்காத சில நல்லாப் பேசும் பாட்டிகளை எனக்கு மட்டும் நிறையவே பிடிக்கும் அவர்களின் பேச்சில் மட்டும்தான் தேன் பாய்ந்ததென்பது புரிந்தபோது நான் பெரியவனாகியிருந்தேன் சின்ன வயதில் மட்டுமல்ல பாட்டிகளை மட்டுமல்ல எனக்கு மட்டுமல்ல என்பதெல்லாம் இப்போதுதான் புரிகிறது!

கழிப்பறைச் சமூகமா?

படம்
வண்ணத் தொலைக்காட்சி மின்சார மாவாட்டி மின் கலப்பி மின் விசிறி என்னென்னவோ கொடுக்கப் போவதாகச் சொல்கிறீர்கள் அதெல்லாம் பரவாயில்லை கழிப்பறை கொடுப்பதாகச் சொல்லியிருந்தால்கூடக் களிப்படைந்திருப்போம் உங்கள் ஊழல்த்தீனிகளின் எச்சங்களையெல்லாம் இங்கு கொண்டு வந்து காசாய்க் கொட்டி எங்கள் சமூகத்தையல்லவா கழிப்பறையாக்கி விட்டீர் பாவிகளா!

தைரியமும் அதன் ஒன்னு விட்ட தம்பியும்

படம்
மிகச் சிறிய வயதிலேயே மனதில் ஆழமாகச் சென்று பதிந்த இரண்டு நற்குணங்கள் தைரியமும் நேர்மையும். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், "பயப்படாதே", "பொய் சொல்லாதே". ஆனால், நானும் உங்கள் எல்லோரையும் போலவே, பயப்பட வேண்டியதற்குப் பயப்பட வேண்டும் என்றும் நல்லதுக்குப் பொய் சொல்லலாம் என்றும் பின்னர் படித்துக் கொண்டேன். "தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பதல்ல; அதை வெல்வது" என்பார்கள். நம்மில் பெரும்பாலானவர்களின் தைரியம் பயம் இன்மையே என நினைக்கிறேன். சிந்தனையற்ற பயமின்மை நம்மை எதில் கொண்டு போய் விடும் என்பதை உணரத் தவறியதன் விளைவு அது. பால்யப் பருவத்தில் நம்மிடம் இருக்கும் தைரியம் அப்படிப் பட்ட ஒன்றே. பயப்பட வேண்டியதற்குப் பயப்படா விட்டால் என்ன நடக்கும் என்பது தெரியாததால் நாம் தைரியமாக இருக்கிறோம். நாமே அதை அனுபவிக்கும் வரை அல்லது வேறொருவர் தொடும்போது சுடுவதைப் பார்க்கும் வரை அல்லது இன்னொருவரிடம் இருந்து (பட்ட அல்லது பார்த்த ஒருவரிடமிருந்து) கேள்விப் படும் வரை தீ சுடும் என்பது நமக்குத் தெரிவதில்லை. ஒருவழியாகக் கடைசியில் நாம் எல்லோருமே அனுபவத்தால் சில விஷய...

முதலமைச்சர்கள் - யார் சிறந்தவர்?

படம்
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் யார்? சிறந்த பத்து, சிறந்த ஐந்து, நல்லவை, அல்லவை பற்றிய பட்டியல்கள் பற்றிப் பேசுவது எப்போதுமே சுவாரசியம்தான். நாம் நீதி(!) வேண்டிப் போய் ஒப்பிட்டுப் பேசினால் அப்படியெல்லாம் பேசப்படாது என்று சொல்லும் பணியிடங்களில் கூட மதிப்பீடுகள் ஒப்பிட்டுத்தான் செய்யப் படுகின்றன. ஆய்வை எளிதாக்குவது மட்டுமின்றி, எது ஒருவரைச் சிறந்தவராகவும் இன்னொருவரை விளங்காதவராகவும் ஆக்குகிறது என்பதை அறியவும் அது பயன்படுகிறது. சில பண்புகளை வைத்து ஒருவரைச் சிறந்தவர் அல்லது விளங்காதவர் என்று அடையாளம் காணும்போது, அவர்களை அப்படியாக்கிய பண்புகள் எவை என்பன பற்றி மேலும் நன்றாகப் புரிந்து கொள்ளவும் அது வாய்ப்பளிக்கிறது. அதே பொறுப்பில் இருக்கும் ஒருவரால் செய்ய முடிந்த ஒரு வேலையை இன்னொருவர் செய்ய முடியவில்லை என்று காரணங்கள் (உண்மையில் அவை காரணங்கள் அல்ல; நொண்டிச் சாக்குகள்) சொல்லும்போது அவர்கள் வாயை அடைப்பதற்கும் அது பயன்படும். எடுத்துக்காட்டாக, ஒரு கொள்ளைக்காரப் போக்கிரியை நாம் விமர்சிக்கும்போது யாராவது வந்து "அரசியல்வாதியாக இருந்து கொண்டு ஊழல் பண்ணாம...