கிரிக்கெட், மக்கட்தொகை மற்றும் இந்தியா
சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இந்தியா வெல்ல வேண்டும் என்றே வேண்டிக் கொள்வேன். அதுவும் முக்கியமான தொடர்களிலும் உலகக் கோப்பையிலும் என்ன விலை கொடுத்தாவது இந்தியா வென்று விட வேண்டும் என்று துடிப்பேன். ஏன்? அதேதான். சரியான விடை. ஏனென்றால், நான் இந்தியன். அது மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருந்தது. என்ன அது? மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியா வெல்கிற போதெல்லாம் ஒப்பற்ற அளவிலான உலக மக்கட்தொகை கொண்டாடிக் குதிக்கிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே இந்தியாதான் அதிக மக்கட்தொகை கொண்டுள்ளது. எனவே இந்தியாதான் வெல்ல வேண்டும் என்றே சொல்வேன். இந்த உண்மையை அறிய உலகளாவிய அறிவெல்லாம் வேண்டியதில்லை. ஏனென்றால், சீனா கிரிக்கெட் ஆடுவதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நீண்ட காலமாகவே சரியான புள்ளிவிபரம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்றுதான் அதற்கான நேரம் கொஞ்சம் கிடைத்தது. அதைப் பார்த்து சில அருமையான (!) கருத்துக்களைக் கண்டெடுத்திருக்கிறேன். இதோ... ஆஸ்திரேலியா 22,567,780 நியூ சிலாந்து 4,393,500 இலங்கை 21,513,990 பாகிஸ்தான் 174,578,558 ...