காங்கிரசும் சத்தியமூர்த்தி பவனும்
காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடுகிறார்களோ இல்லையோ சத்தியமூர்த்தி பவனைச் சூறையாடுகிறார்கள். அடித்து நொறுக்கும் வேலையைச் செய்யும் ஆட்கள் மட்டும் வாக்களித்தால் போதும். கட்சிக்கு டெபாசிட் மட்டும் கிடைத்து விடும். காசை வாங்கிக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் போய் கலாட்டப் பண்ணுபவர்கள் அதே காசை இன்னும் கொஞ்சம் அதிகமாக வாங்கிக் கொண்டு ஓட்டை மட்டும் வேறு யாருக்காவது போட்டு விடுகிறார்கள். அது சரி, தயவுசெய்து அந்தக் கட்டடத்தின் பெயரையாவது மாற்றுங்கள் சாமிகளா. அந்த நல்ல மனிதரை ஏன் போட்டு அடித்து நொறுக்கிக் கேவலப் படுத்துகிறீர்கள்?
கருத்துகள்
கருத்துரையிடுக