பெரும்பான்மை-சிறுபான்மை
பெரும்பான்மைகளின் உரிமைகள்
பெரிதும் பேணப்படும்
பெரிதும் பேணப்படும்
சில முறை பேசினால் போதும்
சிறுபான்மைகளின் உரிமைகள்
சிரத்தையோடு காக்கப் படும்
பெரும்பான்மைப் போர்வையோடு
பெரிதாய்க் கூச்சலிடும்
சிறுபான்மைகளின் குரல்கள்
பெரிதாய்க் கூச்சலிடும்
சிறுபான்மைகளின் குரல்கள்
பெரும்பாலும் புரிந்து கொள்ளப் படும்
அவை செவிடன் காதில் சங்கு!
பேசக்கூட முடியாத அளவு
பெரிதும் சிறுகி இருக்கும்
சிறுபான்மைகளின் குரல்கள்
சிறிதும் மதிக்கப் படா
அவை செத்தவன் காதில் சங்கு!
//பெரும்பான்மைப் போர்வையோடு
பதிலளிநீக்குபெரிதாய்க் கூச்சலிடும்
சிறுபான்மைகளின் குரல்கள்
பெரும்பாலும் புரிந்து கொள்ளப் படும்
அவை செவிடன் காதில் சங்கு!//
அது சத்தமிடுபவர்களின் திறமையை பொறுத்தது!
ஹாஹாஹா... உண்மை!
பதிலளிநீக்குYes, I agree 100%. For example, in Saudi no religious freedom. The majority thinks that it is there to rule, giving scant respect to minorities. This kavithai is a saataiyadi to those fanatics.
பதிலளிநீக்குநன்றி இந்தியன். எழுதிய போது பெரும்பாலும் இந்தியாவை மனதில் கொண்டே எழுதினேன். அவர்கள் கொடுமைதான் பெரும் கொடுமை ஆயிற்றே. :(
பதிலளிநீக்குDemocracy: I wish to believe
பதிலளிநீக்குபேசா விட்டாலும்
சிறுபான்மைகளின் உரிமைகள்
பெரிதும் பேணப்படும்
சில முறை பேசினால் போதும்
பெரும்பான்மைகளின் உரிமைகள்
சிரத்தையோடு காக்கப் படும்
You shall also include...
பதிலளிநீக்கு- Sirupanmaiyei chadum (Chada thoondum) Perumpanmai
Sirupanmaiyai nasukka ninaikkum
- Sirupanmaiyai unarum perumpamai
பேசக்கூட முடியாத அளவு
பெரிதும் சிறுகி இருக்கும்
பெரும்பான்மைகளின் குரல்கள்
முதல் கருத்துரைக்கு - இதுவும் ஒருவகையில் சரியே. சிறுபான்மை-பெரும்பான்மை என்கிற சமன்பாட்டை மதம் என்கிற ரீதியில் மட்டுமல்லாமல் வேறு கோணங்களிலும் நோக்கினால் நான் சொல்ல விழைந்த சில உண்மைகள் புலப்படலாம்.
பதிலளிநீக்குஇரண்டாவதுக்கு - சரியாகப் புரிந்து கொண்டேன் என நினைக்கிறேன். சிறுபான்மையைச் சாடுவோர் அவர்களை நசுக்க நினைப்போர்; அவர்கள் பிரச்சினைகளை உணர்ந்து கொண்டோர் பெரும்பான்மைகளில் மிகக் குறைவு என்று சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இரண்டும் சரிதான். அவர்களைச் சாடுவோரை விட அவர்கள் பிரச்சினைகளை உணர்ந்து கொண்டோர் குறைவே. மீதமுள்ளோர் அனைவரும் இந்தச் சிக்கலுக்குள்ளேயே வர விரும்பாதவர்கள் அல்லது பல்வேறு மற்ற சிக்கல்களை இதை விடப் பெரிய சமூகப் பிரச்சினைகளாகப் பார்ப்பவர்கள். நானும் புரிகிற மாதிரிச் சொல்லி விட்டேன் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்கு