போயா லூசு!!!

எத்தனை பேர் இதை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைய தினம் நிம்மதியாக இருக்க முடியாது என்று மட்டும் தெரிகிறது.

ஒரு பக்கம் மாற்றுக் கருத்து சொன்னாலே தேசத்துரோகி என்று கூச்சல் போடுகிறார்கள். இன்னொரு புறம் இனத்துரோகி என்கிறார்கள். அரசியல் மெதுவாக சல்லிப்பயல்களின் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. சில தனி மனிதர்களின் பேராசைக்குத்தான், மதம் போலவே இனமும் மொழியும் எடுபிடி ஆகிக் கொண்டிருக்கின்றன என்பதை உணராமலேயே ஒரு பெருங்கூட்டம் அந்த வலைக்குள் விழுந்து கொண்டிருக்கிறது.

என்ன பேசினாலும், உன் அம்மா - அக்கா - தங்கச்சி என்று பதிற்கேள்வி கேட்டு மிரட்டுகிறார்கள். தேதிவாரியாக வந்தேறிக் கணக்கு வைத்துக் கொண்டு சாதியைச் சொல்லித் திட்டுகிறார்கள். எதிர்ப்பு அரசியலைத் தாண்டி பகை அரசியல் மேலோங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கும், "அவ்வளவு நாகரீகமானவன்னா அரசியல் பேச வராத!" என்று நியாயமான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.

நல்லது! அடுத்த சில மாதங்கள் அச்சுறுத்துபவையாகவே உள்ளன. அமைதியாக ஒதுங்கிக் கொண்டு விடலாமோ என்றுதான் தோன்றுகிறது. உலகத்துக்கே நாங்கள்தாம் பண்பாடு சொல்லிக் கொடுத்தோம் என்று சொல்லிக் கொண்டு மிருகங்களைப் போலச் சண்டையிடும் நாகரீகந்தான் நமக்குப் புரிபட மறுக்கிறது.

சண்டைக்கு மத்தியில் சுற்றி ஒரு பார்வை பார்த்துக் கொள்ளுங்கள் - யாரெல்லாம் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்று. அப்புறம் தெரியும் நீங்கள் எவ்வளவு சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று! வாழ்த்துக்கள்!!

கருத்துகள்

  1. கொஞ்சம் பத்தி பிரித்துப்போட்டல் நன்றாக இருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அவசர அவசரமாகப் பொறுக்க முடியாமல் எழுதிப் போட்டது என்பதால் விடுபட்டு விட்டது. அடுத்த முறை கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன். இதையும் இப்போதே சரி செய்து விடுகிறேன்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி