கடனாளியாக்கல்

நீ
என்னவெல்லாம் எதிர்பார்த்தாய் என்று
எனக்குத் தெரியாது

ஆனால்
ஒருபோதும்
ஒன்றும்
வாய் விட்டுக் கேட்டதில்லை

நான்தான் உன்னைக்
கடனாளியாக்க ஆசைப்பட்டு
அத்தனையும் செய்தழிந்தேன்

கேட்காமல் வந்தது என்பதாலோ என்னவோ
நீ
கடன்பட்டதாகவே
கருதுவது போற் தெரியவில்லை

கட்டியெழுப்பிய கோட்டைகள்
உடைய உடைய
பாதிக் கடனாவது
அடைபடாதோவென்று 
பரிதவிக்கத் தொடங்கினேன்

எல்லாம் தரைமட்டமானபின்
இப்போது
உன்னைக்
கடனாளியென்று
உணரவாவது வைத்துவிட வேண்டுமென்று
உழைத்துக் கொண்டிருக்கிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்