இடுகைகள்

ஆசிரியர் தினம்

எல்லோரும் முதல் வகுப்பு முதலான தம் ஆசிரியர்களின் பெயர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகிறார்கள். நாமும் முயன்று பார்க்கலாம் என்ற ஆசையின் விளைவு இதோ... ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , பூதலப்புரம் முதல் வகுப்பு: புதூர் டீச்சர் மற்றும்  சத்துணவுட் டீச்சர் இரண்டாம் வகுப்பு: கருத்த வாத்தியார் (கூடுதலாக மொத்தக் கிராமத்துக்கும் வைத்தியமும் பார்ப்பவர்!) (மூவரின் பெயரும் அவர்களைத் தவிர யாருக்கும் தெரியாது என்றே இன்று வரை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!) அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் எங்கள் சென்னம்பட்டிப் பெரியப்பா (சின்னத்தம்பி என்ற அவர் பெயருமே கூட யாரும் அறியாததே!). ச.கோ.கொ. இந்து உயர்நிலைப் பள்ளி , நாகலாபுரம் மூன்றாம் வகுப்பு: பிச்சம்மா டீச்சர் (அவர்களுடைய கணவர் சுப்பிரமணியம் சார் , அருமையான ட்யூஷன் எடுத்தது மட்டுமின்றி , " நீ IAS அதிகாரி ஆக வேண்டிய ஆள்!" என்று பார்க்கும் போதெல்லாம் அன்பைச் செலுத்தியவர்!) நான்காம் வகுப்பு: பத்மா டீச்சர் ஐந்தாம் வகுப்பு: சர்க்கரைத்தாய் டீச்சர் (அவர்களுடைய கணவர் - ஓய்வு பெற்றிருந்த ஆசிரியர் ஆறுமுகம் சார்தான் முறையாக ஆங்கி...

அறவழி

மணி பத்தாகியும் ஒருவரும் கல்லூரிக்குச் சென்றபாடில்லை. கல்லூரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் அனைவரும் மறியலில் ஈடுபட்டிருந்தார்கள். சாலையின் நடுவில் இருந்து எழுந்த - இந்த தேசத்தின் எதிர்காலத்தின் விசில் சத்தம் காற்றோடு கலவரம் நடத்தியது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அவர்கள் தீர்வு வேண்டி வருவது இந்த நெடுஞ்சாலைக்குத்தான். இங்கே, "விலைவாசி உயர்வைக் கண்டித்து...", "வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்து..." என்று பல்வேறு காரணங்களுக்காகப் பேருந்துகள் நொறுக்கப் பட்டிருக்கின்றன. எப்போதும் போலவே இன்றும் பல பேருந்துகள் நொறுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. கண்ணுக்குத் தெரிந்த அளவில் எந்த வண்டியிலும் கண்ணாடி விட்டு வைக்கப் படவில்லை. அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும் சாலையின் நடுவில் ஒரு கூட்டம் கானா, நடனம், கச்சேரி என்று கலக்கிக் கொண்டிருந்தது. கல்லூரிக்குள் நடக்கும் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாதவர்கள் இத்தனை பேர் இத்தனை திறமைகளை யார் கண்ணும் பட்டு விடாமல் ஒளித்து வைத்திருந்ததன் காரணந்தான் புரிபடவில்லை. இதற்கிடையிலும் ஒரு சிறுபான்ம...

பிடித்தலும் பிடிக்காதலும்

உனக்குப் பிடித்ததெல்லாம் எனக்கும் பிடித்ததும் எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும் பிடித்ததும் உனக்குப் பிடிக்காததெல்லாம் எனக்கும் பிடிக்காமல் போனதும் எனக்குப் பிடிக்காததெல்லாம் உனக்கும் பிடிக்காமல் போனதும் இந்த விளையாட்டின் ஆதி நுட்பங்கள் உனக்குப் பிடிக்காதவர்களும் எனக்கும் பிடிக்காமல் போனது ஏற்றுக் கொள்ள இயலாததோர் இலக்கணமாகத்தான் இருக்கிறது இன்னமும் இவையெல்லாம் சிறிது முற்றிய நிலையில் நிகழ்கிற பிறழ்ச்சிகள் என்று விட்டு விட்டுப் போய்விடலாந்தான் ஆனாலும் ஒரேயொரு கேள்வி மட்டும் அறுத்துக் கொண்டே இருக்கிறது இன்னமும் அதன்படியே உனக்குப் பிடிக்காத என்னையும் எனக்குப் பிடிக்கவில்லை இப்போது! அப்படியானால் எனக்குப் பிடிக்காத உன்னையும் உனக்குப் பிடிக்காமல் போயிருக்க வேண்டுமே?! போயிருக்கிறதா?!!

உள்ளிருக்கும் மிருகம்

பச்சை விளக்கு மஞ்சளாகும் வேளையில் மிருகமாகி... எல்லை தாண்டியதும் மீண்டு(ம்) மனிதத்துக்குத் திரும்பி விடுகிறோம்!

மக்களாட்சி

மக்களால் யாருக்காகவோ மக்களை வைத்தே நடத்தப் படுவது!

அறிந்தும் அறியாமலும்

நிறையப் படிப்பதால் நிறைய அறிவைக் குடிப்பதால் நீர் நீரற்ற வெற்றுச் சுரைக்காய் எம்மை விட அறிவாளியாகத்தான் இருக்க வேண்டுமென்று படுகிறது ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான உம் மீது திட்டமிட்டுத் திணிக்கப்படும் பிரச்சார எழுத்துக்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு உம் சுவர்களுக்கு வெளியே இருக்கும் உலகையே இல்லையென்று வாதிடுகையில் வாதிட மறுக்கையில் அறியாமையை அறிந்திருக்கும் நிலையே அறிந்தும் அறிய மறுக்கும் நிலையினும் மேலென்று அறிவித்து விடுகிறீர்!

நாய்த்தனம்

எனக்கு நாய்களைக் கண்டால் அலாதி பயம் நாய்த்தனம் நமக்கு ஒத்துவராதப்பா... அவற்றுக்கோ நம்மைக் கண்டால் அலாதி இன்பம் அந்த பயம் இருக்கட்டும் மானிடா... உன் போன்று பயந்து ஒதுங்குவோர் மட்டும் இல்லையென்றால் எம் போன்ற நாய்களுக்கு உம் சமூகத்தில் மரியாதையே இல்லாமல் போயிருக்கும்!