வெளிச்சத்தின் இழப்பு
சுற்றிலும் இளைஞர்களையே வைத்துக் கொண்டாலும்
சுற்றுவதெல்லாம் இளைஞர்களோடே என்றமைத்துக் கொண்டாலும்
முயன்றோ முயலாமலோ
உணர்விலும் உருவிலும்
இளைஞனாகவே இருந்துவிட இயன்றாலுங்கூட
உள்ளுக்குள் ஓடும் கடிகாரம் மட்டும்
அணு அணுவாய்க் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்
இளமையின் இழப்பை
நினைவுறுத்தி நினைவுறுத்தித்
துன்புறுத்திக்கொண்டேதானிருக்கிறது
உச்சி வேளைக்குப் பிந்தைய வெயில்
உச்சிவெயிலினும் பிரகாசமாயிருந்தாலுங்கூட
மாலை நெருங்குகின்றதென்ற கவலையே
அதை அனுபவிக்க விடாமல்
ஆக்கிவிடுகிறதே!
ஆக்கி எங்கே விடுகிறது?
அழித்தல்லவா விடுகிறது!
அந்திதான் அழகென்றும்
வெயிலுக்குப் பிந்தையதுதான்
விளையாடப் பொருத்தமான பொழுதென்றும்
ஆயிரந்தான் ஓதினாலும்
வெயிலோடு போய்விட்ட
வெளிச்சத்தின் இழப்பு பற்றிய கவலைதானே
மாலையையும் பாழாக்கி விடப் போகிறது!
சுற்றுவதெல்லாம் இளைஞர்களோடே என்றமைத்துக் கொண்டாலும்
முயன்றோ முயலாமலோ
உணர்விலும் உருவிலும்
இளைஞனாகவே இருந்துவிட இயன்றாலுங்கூட
உள்ளுக்குள் ஓடும் கடிகாரம் மட்டும்
அணு அணுவாய்க் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்
இளமையின் இழப்பை
நினைவுறுத்தி நினைவுறுத்தித்
துன்புறுத்திக்கொண்டேதானிருக்கிறது
உச்சி வேளைக்குப் பிந்தைய வெயில்
உச்சிவெயிலினும் பிரகாசமாயிருந்தாலுங்கூட
மாலை நெருங்குகின்றதென்ற கவலையே
அதை அனுபவிக்க விடாமல்
ஆக்கிவிடுகிறதே!
ஆக்கி எங்கே விடுகிறது?
அழித்தல்லவா விடுகிறது!
அந்திதான் அழகென்றும்
வெயிலுக்குப் பிந்தையதுதான்
விளையாடப் பொருத்தமான பொழுதென்றும்
ஆயிரந்தான் ஓதினாலும்
வெயிலோடு போய்விட்ட
வெளிச்சத்தின் இழப்பு பற்றிய கவலைதானே
மாலையையும் பாழாக்கி விடப் போகிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக