காதலித்துப் பார்
காதலித்துப் பார்
கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கற்பாய்
கேள்வி கேட்காமல் வழிபடப் பழகுவாய்
மக்களாட்சியில் மரியாதை குறையும்
மனிதன் தெய்வமாகத் தெரிவான்
குறைகளே காணாத மேன்மகனாவாய்
எல்லாவற்றிலும் நல்லது காண்பாய்
வேலை மறந்து விளம்பரம் செய்வாய்
வழக்காடுவதில் வல்லவனாவாய்
கேள்வி கேட்காமல் வழிபடப் பழகுவாய்
மக்களாட்சியில் மரியாதை குறையும்
மனிதன் தெய்வமாகத் தெரிவான்
குறைகளே காணாத மேன்மகனாவாய்
எல்லாவற்றிலும் நல்லது காண்பாய்
வேலை மறந்து விளம்பரம் செய்வாய்
வழக்காடுவதில் வல்லவனாவாய்
நடிப்பு உரைகள் மேல் பிடிப்பு வந்திடும்
பித்தலாட்டங்களைச் சாணக்கியம் என்பாய்
அட்டகாசங்களைத் தலைமைத்துவம் என்பாய்
உலக அரசியலில் பண்டிதம் பெறுவாய்
பொருளியல் மேதையாவாய்
பொய்யையும் புரட்டையும் புகழப் பழகிடுவாய்
எல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் பதிலளிக்கும் வித்தை கற்பாய்
ஆகா ஓகோவென்று அடிக்கடிக் குதிப்பாய்
கூடச் சேர்ந்து குதியாதோரை
வெறுத்துப் பேசி விலக்கி விடுவாய்
பித்தலாட்டங்களைச் சாணக்கியம் என்பாய்
அட்டகாசங்களைத் தலைமைத்துவம் என்பாய்
உலக அரசியலில் பண்டிதம் பெறுவாய்
பொருளியல் மேதையாவாய்
பொய்யையும் புரட்டையும் புகழப் பழகிடுவாய்
எல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் பதிலளிக்கும் வித்தை கற்பாய்
ஆகா ஓகோவென்று அடிக்கடிக் குதிப்பாய்
கூடச் சேர்ந்து குதியாதோரை
வெறுத்துப் பேசி விலக்கி விடுவாய்
சென்ற ஆண்டின் நியாயம்
இந்த ஆண்டு அநியாயமாகும்
சென்ற ஆண்டின் அநியாயம்
இந்த ஆண்டு நியாயமாகும்
இந்த ஆண்டு அநியாயமாகும்
சென்ற ஆண்டின் அநியாயம்
இந்த ஆண்டு நியாயமாகும்
காதலித்துப் பார்
தலைவன் ஒருவனைக் காதலித்துப் பார்
தலைவன் ஒருவனைக் காதலித்துப் பார்
கருத்துகள்
கருத்துரையிடுக