தளர்பிடி

நீ வசம்மாக மாட்டிக் கொள்ளும் போதெல்லாம்
ஏதோவொன்றை உளறித் தப்பிக் கொள்கிறாய்

அது உளறல் என்று
எனக்குப் புரியவில்லை என்று
எண்ணியும் கொள்கிறாய்

அல்லது
அது பற்றி
அதிகம் எண்ணவே வேண்டியதில்லை என்று
எண்ணிக் கொள்கிறாய்

இறுக்கிப் பிடித்தால்
மூச்சுத் திணறிச் சாகப் போவது
நீ மட்டுமல்ல
நாம் இருவருமே என்பதால்
நானும்
உன் உளறல்களை நம்பிக் கொள்வதாய்
நம்ப வைத்து நகர்ந்து விடுகிறேன்

எனக்குத் தெரியும்
எனக்காக
இப்படித்தான் நீயும்
எத்தனையோ முறை
பிடி தளர்த்திப் பின் வாங்கியிருக்கிறாய்...

உறவு பிழைக்க
உண்மைகள் அவ்வப்போது
செத்துத்தானே ஆக வேண்டும்
குறைந்த பட்சம்
உறங்கியாவது போக வேண்டுமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி