கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 4/7
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... சிங்கப்பூர் என்றால் எல்லோருக்கும் பிடிப்பதற்கு முக்கியமான காரணம் - இங்கே மனிதர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு. வேறெங்கும் இந்த அளவுக்குப் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை நான். அதற்குக் காரணம் இங்கிருக்கும் சட்டம்-ஒழுங்கு. அதற்குக் காரணம் - கடுமையான தண்டனைகள். மற்றவற்றில் எல்லாம் மேற்கு நாடுகளைப் போல இருந்தாலும் இந்த ஒன்றில் மத்தியக் கிழக்கு போலவும் கிழக்கு போலவும் தான் இருக்கிறது சிங்கப்பூர். ஒரு வருடத்தில் மொத்தக் கொலைகளின் எண்ணிக்கை பத்தோ என்னவோதான் என்கிறார்கள். திருடிச் சிக்கினால் எந்தப் பேச்...